Monday, July 25, 2011

வீடியோக்களை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் மாற்றுவதற்கு...

நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது.
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும். அந்த வகையில் இந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும்.

இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான்.

பலவிதமான நுணுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது. ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது.

வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.

Download Here

Sunday, July 17, 2011

Nithyananda - Ranjitha - Latest News


nithiyanandhadance1607-02 by tamil2011

Saturday, July 16, 2011

வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்டுகளில் பதிவிறக்கம் செய்வதற்கு...

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடிச்செல்வது யூடியூப் தளம் ஆகும்.
ஆனால் இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது நீட்சிகளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் சாதாரணமாக ஓன்லைனில் இருந்து நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதற்கு Clip.Dj என்னும் தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் எந்தவித மூன்றாம்தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வீடியோவிற்கான குறிச்சொல்லை இட்டு தேடவும். பின் விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய Download என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஓன்லைனில் இருந்த படியே பாடலை MP3யாகவும், MP4கவும் கேட்க முடியும். மேலும் பதிவிறக்கிய வரிசைப்பட்டியலை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும்.

இணையதள முகவரி

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு...

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.
இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.

இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஓன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.

1. உங்கள் கணணி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.

2. உங்கள் கணணியில் Flash Player நிறுவச் செய்திருக்க வேண்டும்.

3. அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test  செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

5. அடுத்து உங்கள் கணணி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. உங்கள் கணணி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.

7. அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.

8. ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும். நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல. கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.

Monday, July 4, 2011

கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்...

கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா, கவலை வேண்டாம் புதிய பரிமாணத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணணி ஆசிரியர்கள்.
சாதாரண பெருக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும், ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது.

சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதைப்போல் தான் கணித்ததை வேடிக்கையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம்.

இங்கு சென்று சாதாரண பெருக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர். இயற்கணிதம்(Algebra), வடிவியல்(Geometry) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில் வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல்.

இணையதள முகவரி