Monday, February 28, 2011

நமக்குத் தேவையான மூன்று...

*உன் உடலில் ஏற்பட்டுள்ள கறையைப் பற்றிக் கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்தால், அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.


*உங்களிடம் அன்பு இருந்தால் ஆகாத செயல் என்று எதுவுமில்லை. நீங்கள் தன்னலத்தை துறந்து விட்டால் உங்களை எதிர்க்கும் சக்தி ஏதுமில்லை.

*நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். அதனால், புனிதமும் பூரணத்துவமும் உங்களிடம் நிறைந்திருக்கிறது.

* அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.

* ஒட்டகம் முள் செடியைச் சாப்பிடும் போது வாயிலிருந்து ரத்தம் சொட்டும், இருந்தாலும் தின்பதை

நிறுத்துவதில்லை. அதுபோல உலகத்தார் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானாலும் உலகப்பற்றை அவர்கள் விடுவதில்லை.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.

                                                    -விவேகானந்தர்

Tuesday, January 18, 2011

மனம் தெளிந்த நீராகட்டும்...

* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.

* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.

* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

                                                            - அவ்வையார்

Monday, January 17, 2011

கவியரசு வைரமுத்துவின் 1000ம் பாடல் வெளீயீட்டு விழா.Part-2

கவியரசு வைரமுத்துவின் 1000ம் பாடல் வெளீயீட்டு விழா.

Sunday, December 26, 2010

எளிதான தமிழில் J2EE (java)கற்க...

                                           
தொடர்ந்து கற்க வீடியோ கிளிப் முடிந்தவுடன் அடிபகுதில் கிடைக்கும் அடுத்தடுத்து கிளிப்புகளை கிளிக் செய்யவும்.
                                                     நன்றி - விக்னேஷ்.

Sunday, December 12, 2010

யுவன் ஷங்கர் ராஜாவின் - மியூசிக் நிகழ்ச்சி ( துபாய் ). plese off the Radio First.

கன்னத்தில் கன்னம் வைக்க - காதல் பாடல்