Tuesday, September 11, 2012

உடல் எடையை ஈஸியாக குறைக்கும் வீட்டு பானங்கள்!!!


இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய எளிமையான வீட்டு பானங்கள் என்னென்னவென்றும், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் என்ன பலன் அதில் இருக்கிறதென்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.
கிரீன் டீ: அனைவருக்கும் கிரீன் டீ-யை பற்றி தெரிந்திருக்கும். இது உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும். அத்தகைய கிரீன் டீ-யை, அதன் இலைகளால் அல்லது கடைகளில் விற்கும் டீ பைகளை வாங்கி, வீட்டில் தயாரிப்போம். கிரீன் டீ சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எளிதில் எடையானது குறைந்துவிடும். அதிலும் அந்த கிரீன் டீ-யின் இலையை இரவில் படுக்கும் முன் நீரில் போட்டு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ இலையில் இருக்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நீரில் இறங்கி, அதனை நாம் பருகினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மேலும் அந்த கிரீன் டீ உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் கிரீன் டீ குடித்தால், 2-4 மணிநேரம் பசியானது ஏற்படாமல் நன்கு கட்டுப்படும்.
சிட்ரஸ் ஜூஸ்: ஜூஸ் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய ஜூஸில் சிட்ரஸ் இருக்கும் ஜூஸ்களை பருகினால், உடல் எடையானது குறைந்துவிடும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. திராட்சை பழங்களிலும் ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் திராட்சை பழங்களில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. ஆகவே அதன் தினமும் ஒரு டம்ளர் பருகினால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். முக்கியமாக எலுமிச்சை பழ ஜூஸ் சாப்பிடும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையே உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. ஆகவே அப்போது அந்த ஜூஸ் உடன் உப்பை சேர்த்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் கூட கலந்து குடிக்கலாம்.
ஆப்பிள் வினிகர் : குளிர்ந்த தண்ணீரில் தேன் மற்றும் ஆப்பிள் வினிகரை கலந்து குடித்தால், எடை விரைவில் குறையும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. ஆகவே எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு டம்ளர் இந்த ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் அது தடுக்கும். அதிலும் இதனை தினமும் இருமுறை குடித்தால் நல்லது.
காபி: இது மற்றொரு எடையை குறைக்கும் பானம். காப்ஃபைன் ஒரு ஆல்கலாய்டு. ஆகவே காப்ஃபைன் கலந்திருக்கும் காபியை அளவோடு குடித்தால், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும். மேலும் கொக்கோ, காபி மற்றும் டீ போன்றவையும் காப்ஃபைன் இருக்கும் பொருட்களே. அதிலும் இந்த பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் உடல் எடை குறையும், அதற்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை, உடலில் வெப்பம் அதிகமாதல் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே, மேற்கூறிய பானங்களை குடித்து உடல் எடையை ஈஸியாக குறைத்து, அழகாக, பிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

Monday, August 13, 2012

தாய்மை அடைவதை தடுக்கும் காபி...


குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தாய்மார்கள், காபி, கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏனெனில் தினசரி நான்கு கப் காபி குடிப்பது கரு உருவாவதை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மாறிவரும் உணவுப் பழக்கம், சூழ்நிலை, மரபியல் ரீதியான பிரச்சினைகளினால் இன்றைய இளைய தலைமுறையினரிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது.
இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் காபி, கொழுப்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், முளைகட்டின பயிறு வகைகள், காய்கறிகள் சாப்பிடலாம். கீரைகள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
மீன் உணவுகளை சாப்பிடலாம். சிக்கன் சாப்பிடக்கூடாது. கார்பனேட் பானங்களான பெப்ஸி, கோக் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் அதிகம் டென்சன் ஆனாலும் அது கருவினை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். அதேபோல் சாதாரணமாகவே தினசரி நான்கு கப் காபி குடிக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் என்னும் பொருள்தான் என்று கூறியுள்ளனர்.
காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு இரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
காஃப்பைன் பெண்களின் கரு முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும், அவர்கள் எச்சரித்துள்ளனர். கருவுறுதலில் மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்கள் காபி குடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.
தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதிமுக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.
தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது.
குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை...


நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, வெந்தயக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெந்தயக் கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது.
வெந்தயக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தயம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.
நூறுகிராம் வெந்தயக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.
அதோடு வெந்தயக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.
வெந்தயக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.
இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தயக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தயக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தயக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம்.
வெந்தயக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால், இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

இதயத்திற்கு பலத்தை தரும் பப்பாளி பழம்...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள் செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது.
அதிலும் பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர். மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.
பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும். அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

Tuesday, June 5, 2012

9ன் சிறப்பு தெரியுமா?


எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி
நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி
நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்
நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.
நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்
நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்
நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்
நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்
நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்
அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்
நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.
நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்
நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.
நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்
நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி
நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.
நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்
18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான். 9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Tuesday, May 22, 2012

கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு...

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள்.
அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.

இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும்.

இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )

இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது

D:/>attrib +h +s Folder Name(Folder Name--> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும்.

தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,

D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும்.

இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

Thursday, May 17, 2012

நிம்மதியாக உறங்க வேண்டுமா?


சிலர் எப்போது பார்த்தாலும் போனும், கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் கைபேசி இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள்.
உறங்கும் போது கூட கைபேசியில் பாட்டு கேட்டுக் கொண்டோ, தலையணைக்கு அடியில் கைபேசியை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, கைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்.

மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான் வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள்.

நாம் உபயோகிக்கும் படுக்கையும் நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு சவுகரியமானதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

படுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

தலையையும், கழுத்தையும் தலையணை பாலம் போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல.

படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.

படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.

படுக்கை அறையில் தொலைக்காட்சி, கணணி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கணணி, மடிக்கணணி, தொலைக்காட்சி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

கைபேசியை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.