Thursday, August 27, 2009

அம்மா என் வலைப்பூவில் முதல் பூ உனக்கு...

அம்மாவுக்கு சமர்ப்பணம்....

அம்மா !!!
என் வலைப்பூவில்
முதல் பூ உனக்கு...

நான் வளர்ந்தது
வளர்வது
வளரப்போவது
அது உன் கைவண்ணம்...

இன்னும் சிறிதுகாலம்
நீ இருந்திருந்தால்
உன்னை பிரமாதப்படுத்தி
பார்த்திருப்பேன்...

திசைகளை காட்டிவிட்டு
திடீரென்று
மறைந்துவிட்டாய்...
தேடினாலும் கிடைக்கமாட்டாய்
இருந்தும் தேடுகிறேன்...

இந்த தேடல்
என் மரணம் வரை
நீடிக்கும்...
   
                                            - அன்புடன்
                                               தங்கமணி.



No comments:

Post a Comment