* உன் உடலில் கறை ஏற்படுத்தியுள்ள ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில், நீ மூழ்கி எழுந்தால் இது போல் ஆயிரமாயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
* ஒட்டகம் முள்செடியைத் தின்னும் போது, ரத்தம் வாயிலிருந்து வழிந்தாலும் தின்பதை நிறுத்துவதில்லை. அதுபோல, உலக மக்கள் எத்தனை துன்பம் வந்தாலும் தன் ஆசைகளை விடுவதில்லை.
* தனக்குத் தானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதை விட மற்றவர்களுக்கு நன்மை செய்து ஆயிரம் நரகங்களுக்கு செல்லவும் தயாராக இருங்கள்.
* எல்லாப் பேய்களும் நம் மனத்திலிருந்து தான் நம்மை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக விளங்கும்.
* "நான் தவறு செய்து விட்டேன்' என்று அழுது புலம்புவதால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் குற்றவுணர்ச்சி கொள்ளத்தேவையில்லை.
* நல்ல விஷயங்களை "சபாஷ் நன்றாய் இருக்கிறது' என்று பாராட்டினால் மட்டும் எந்த நலனும் உண்டாகாது. துருப்பிடித்த இரும்பை பழுக்கக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து வளைப்பது போல, நல்ல விஷயங்களை அப்படியே மறந்து விடாமல் மனதை நெறிப்படுத்தினால் தான் நல்லது.
-


No comments:
Post a Comment