Monday, July 12, 2010

அன்பால் உள்ளத்தை நிரப்புங்கள்...

ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உடலில் எல்லாப் பாகங்களிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.

* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப் படுகின்றது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனின் மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை. அவன் தன் லட்சிய வாழ்வில் வழி தவறாமல் வெற்றி நடை போடு கிறான்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. எனவே, அன்பால் உள்ளத்தை நிரப்புங்கள்.

* எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளரச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.

* இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையத் தகுதியானவர்கள்.
                                                          - விவேகானந்தர்.

No comments:

Post a Comment