Friday, June 24, 2011

கைமாற்றாக அவ்வளவு பெரிய தொகையா????



கலைஞர் "டிவி' இயக்குனர் சரத்குமார், பங்குதாரர் கனிமொழி ஆகியோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ., சேர்த்திருப்பது முற்றிலும் தவறு. "டிவி' நிறுவனம் கடன் வாங்கியது, வியாபாரம் சம்பந்தப்பட்டதே தவிர, அரசு ஒதுக்கீடு செய்த, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையதல்ல என, கட்சியின் உயர்மட்ட செயற்குழு கூறியுள்ளது. தன் கட்சி அமைச்சரின், தொலை தொடர்புத் துறையிடம் உரிமம் வாங்க வந்தவரிடம், எதற்காக கடன் வாங்க வேண்டும்? அதுவும், ஈடு சொத்து ஏதும் இல்லாமல், கைமாற்றுக் கடனாக அவ்வளவு பெரிய தொகையை எதற்காக பெற வேண்டும்? உரிமம் வாங்க வந்தவரிடம், ஈடு சொத்து ஏதும் இல்லாமல் கடனாக வாங்கியதால் தானே, "அது கடன் இல்லை; லஞ்சம்' என சி.பி.ஐ., கூறுகிறது. "விஞ்ஞானப் பூர்வமா எதையும் செய்வீங்க'ன்னு, சர்க்காரியா கமிஷனே சொல்லியிருக்கிறதே. பின் எப்படி இப்படி மாட்டிக்கிட்டீங்க... "நேரம் சரியில்லை' எனச் சொல்வது இதுதானோ! இல்லையென்றால், "பெரிய கோவிலுக்குள் போனால், ஆட்சி பறிபோய் விடும் எனச் சொல்வதெல்லாம் மூட நம்பிக்கை' என்று சொல்லி, அங்கு போகாமல் இருந்த நீங்கள், பட்டு வேட்டி கட்டி, சைடு வழியிலே நுழைவீங்களா! நீங்க மூடநம்பிக்கைன்னு சொன்னாலும், அது என்னவோ பலிச்சிடுச்சே! சென்னைக்கு வரும்போது, தன்னை மரியாதை நிமித்தம் சந்திக்க வில்லை என்று, ராகுல் மேல உங்களுக்கு கோபம் இருந்தது போல, பெருவுடையாருக்கும் இருந்திருக்குமோ?


                              நன்றி - தினமலர்.

No comments:

Post a Comment