Sunday, February 7, 2010

சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை...

"நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்...

மக்களைச் சுருள வைக்கும்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'

- வைரமுத்து

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் கிளம்பியிருப்பர், கண்டனக் கூட்டமொன்று நடத்த. திரைப்படம் என்பது ஒரு உன்னதக்கலை தான்; மறுப்பதற்கில்லை; அது, நல்ல விஷயங்களை தரும் போது. இன்றைய தமிழ் சினிமா, எந்த உணர்வை மக்களிடம் அதிகம் பரப்புகிறது? காதலா, கடமையா, வன்முறையா, ஆபாசத்தையா, மூட நம்பிக்கையா என்று கேள்விகள் பலவற்றை எழுப்பினால், விடையை நான் சொல்லத் தேவையில்லை; உங்களுக்கே புரியும் சற்று சிந்தித்துப் பார்த்தால். "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்.

கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது. நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள் ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அர்த்தம், நல்ல படங்களே வெளிவருவதில்லை என்பதல்ல; அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, ஒளிப்பதிவு என, அனைத்து நல்ல அம்சங்களுடன் கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின் றன. ஆனால், அப்படிபட்ட படங்கள் எத்தனை வெளி வருகின்றன என்பதே மிகப் பெரிய கேள்வி. ஒரு குடத்துத் தண்ணீரில், ஒரு சொட்டுப் பாலை கலந்தால் அது பாலாகிவிடுமா? முன்பெல்லாம் தியேட்டருக்குச் சென்றால் தான் சினிமா. ஆனால் இன்று? தொலைக்காட்சி மூலம் சினிமா நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டது. வீட்டுக்குள் வந்த சினிமா, எல்லா வித உறவுகளோடும் அமர்ந்து பார்க்கும் படியாகவா உள்ளது? அதிலும், தனியார் தொலைக்காட்சிகள் பலவும், போட்டி போட்டு சினிமா நிகழ்ச் சிகளை ஒளிபரப்பி, தொலைக் காட்சி யை தொல்லைக்காட்சிகளாக அல்லவா மாற்றிக் கொண்டிருக்கின்றன.

நம் தமிழ் சமூகத்தில், சினிமாவின் தாக்கம் பெருமளவு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நடிகைக்கு கோவில், நடிகன், "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம், குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க ஒரு நடிகை, வருமான வரியை கட்டச் சொல்லி ஒரு நடிகர், அவ்வளவு ஏன்... புத்தகக் கண்காட்சியிலும் நடிகர்களே! தீபாவளி, பொங்கல், என, அனைத்து விஷேச நாட்களிலும், நம் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், "டிவி' மூலம் வீட்டுக்குள் புகும் சினிமாக்காரர்கள். இதாவது பரவாயில்லை... குடியரசு, சுதந்திர தின நாட்களிலும் நடிகர்களே! அந்தோ பரிதாபம்... இந்த நிலையைப் பார்க்க தேசத் தந்தை காந்தியுமில்லை; பாட்டுக்கொரு புலவன் பாரதியுமில்லை; இருந்திருந்தால், வாங்கிய சுதந்திரத்தை, "வாபஸ்' பெறக் கோரி, தேசத்தந்தை மீண்டும் ஒரு சத்தியாகிரகத்தை செய்தாலும் வியப்பதற்கில்லை. பள்ளி மாணவன் என்றால் அவனுக்கு ஆசிரியரை கலாய்க்கத் தெரிய வேண்டும்; கல்லூரி மாணவன் என்றால், அவனுக்கு கட்டாயமாக, "காதல்' வர வேண்டும். இது, சினிமாவின் எழுதப்படாத இலக்கணம். இந்த இலக்கணத்தை படிப்பதால் தானே, பள்ளி மாணவர்களும், "பன்ச்' டயலாக்குகளை பரவலாய் பேசுகின்றனர்.

"கருத்தம்மா' படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பதிலாக இருக்கும். அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? தமிழனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? தமிழர்கள் உயர்ந்த விஷயங்கள் பலவற்றையும் ரசிப்பதே இல்லையா? இளைஞர்கள் மனதில் சுய முன்னேற்றம், சமூக பொறுப்புணர்வு பற்றிய சிந்தனையே இல்லையா? இல்லை ரசிப்பதற்கு தகுதியற்றவர்களா?

மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சமூக அக்கறையில்லாமல், வெட்டு, குத்து, ஆபாசத்தை அள்ளித் தெளிப்பதா? ஆரம்பத்தில் இது போன்ற படங்களை மக்கள் தாழ் பார்வையுடன் பார்த்தாலும், பின் அவற்றையும் வேறு வழியின்றி ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காவிரி பிரச்னைக்கும், ஈழத்தமிழர் படுகொலைக்கும் உண்ணாவிரதம் இருந்து பேராட்டம் நடத்தி, தமிழன் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களாய் வேஷம் போடும் இவர்களுக்கு, தமிழ் சினிமாவால் இந்த சமூகம் பாழாய் போய்கொண்டிருப்பது தெரியாதா? "அம்மா-அப்பா வாயில சோத்தைப் போடு, அடுத்தவன் வாயில மண்ணைப் போடு' என, இவர்கள் பணம் சம்பாதிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகளையும் கெடுத்து, குடும்பங்களை நாசமாக்கி சமுதாயத்தை சீரழிக்கும், இதுபோன்ற படங்களை சென்சார் என்ன செய்ய போகிறது? கதைக்கு தேவையென்றால், ஆபாசத்தை அனுமதிப்போம் என்று இன்னும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கப் போகிறதா?

அப்படியானால், ஆபாசத்தை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கும் படங்கள் அனைத்துமே, உண்மையில் கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறதா அல்லது கரன்சிகள் கைமாறியதால் கதையோடு தொடர்புடையதாக்கப்பட்டதா? பாடல்கள், படங்கள் என அனைத்திலும் ஒழுக்க மீறல், ஆபாசம். இந்த ஒழுக்க மீறல்களையும், வக்கிரத்தையும் ஆட்சேபனை தெரிவிக்காமல், இன்னும் நாம் ஆதரித்து வந்தால், அவை போகப் போக மோசமான விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமா... சில ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது; தற்போது, இப்படி இருக்கிறது என்று இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கப் போவது யார்? பூனைக்கு மணிகட்டப் போவது யார்? கேளிக்கை வரியைக் கேலி கூத்தாக்கிய அரசாங்கமா? கறைபடிந்து, கண்களை மூடிக் கொண்டு இருக்கும் சென்சார் போர்டா? இனியும் இந்த நிலை தொடருமானால்... பொறுப்பதற்கில்லை... வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை வாய்மையாக்க. anjalarajam@gmail.com

                   - இரா. ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி

Thursday, February 4, 2010

சூரிய குளியலும் 'பாலியல்' உணர்வை தூண்டும் : புதிய ஆய்வில் தகவல்...


“வயாகரா” மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

Wednesday, February 3, 2010

ஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்...

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.


கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.

இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.


இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

http://www.youtube.com/results?search_query =thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

பீமா படப்பாடல்...





அயன் படப்பாடல்...

  

Monday, February 1, 2010

How to prepare 'Herbal Cake'!