Sunday, January 10, 2010

உயிரின் எடை எவ்வளவு???


உயிரின் எடை 21 கிராம். - இது ஒரு புதிய படத்திற்கான நாமகரணம்! இதன் கதை, ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பின்பு அவன் மொத்த எடையில் இருந்து 21 கிராம் குறைவதாக ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுவே நம் உயிரின் எடையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வெறும் உடலில் 21 கிராம் உயிரை வைத்துக் கொண்டு பல்வேறு விதமான கொடூரங்களையும் செய்யும் மனிதனை சிந்திக்க வைக்கும் விதமாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சத்ரியன் படத்திற்கு பிறகு இதில் மலையாள நடிகர் திலகன் ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, ஒலி வடிவமைப்பு, இசை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நாயகனாகவும் நடித்து வருகிறார் இந்திரஜித். இவர், தண்டாயுதபாணி, கி.மு., சாமிடா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பதும், திரைப்படக் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment