Sunday, August 1, 2010

தியானத்திற்கு தேவை மூன்று...

* வெற்றியை நாடும் மனிதர்கள் தியானம் செய்வது மிக அவசியம். மூன்று விஷயங்
   களில் கவனம் இருந்தால் மட்டுமே ஒருவருக்குத் தியானம் எளிதில் கைகூடும்.

* தியானத்திற்கு அடிப்படை உடலிலும், உள்ளத்திலும் தூய்மையாக இருத்தல்
   வேண்டும். மனத்தூய்மையின் அவசியத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
  அத்துடன் அதற்கு பொறுமையும் அவசியம்.

* தியானப்பயிற்சியின் தொடக்கத்தில் மனதில் ஆச்சரியமான காட்சிகள் எல்லாம்
  தோன்றும். நாளடைவில் அவை மறைந்துவிடும். மனம் நம்மைச் சோதிக்கும்.
 பொறுமையோடு இருந்தால் வெற்றி நிச்சயம். எனவே, விடாமுயற்சியும் தியானத்திற்கு தேவை.

* தியானத்தின் முடிவில் ""பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளே! உன் மகிமையைத் தியானிக்கிறேன். என் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!''' என்று பிரார்த்திக்க வேண்டும்.

* உடல் நன்றாக இருந்தாலும், நோயுற்று அவதிப்பட்டாலும் தியானப்பயிற்சியை ஒருநாளும் தவறவிடக்கூடாது. காலை, மாலை நேரங்களில் உடலும், மனமும்

அமைதியாக இருக்கும் என்பதால், இவ்வேளைகளில் தியானப்பயிற்சி எளிதில் கைகூடும்.

-விவேகானந்தர்

1 comment:

Thamizhan said...

மன அமைதிப் பயிற்சிக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை.மந்திரங்கள்,தந்திரங்கள் சொல்லி ஏமாற்றுவோரைத் தவிர்க்க வேண்டும்.மூளையை அமைதிப் படுத்த இரண்டே வழிகள் தான்.ஒன்று மருந்துகள் மற்றது மூச்சுப் பயிற்சி. இந்த மூச்சுப் பயிற்சியை கால் விரல்கள் தொடங்கி மெதுவாகத் தலை வரை கவணஞ் செலுத்தி மெதுவாக மூச்சு விடப் பயின்றுக் கடைசியில் வெறும் மூச்சை மட்டும் நினைத்தால் மூளை அடங்கி அமைதி பெறும்.

Post a Comment