-
Monday, August 9, 2010
தனிமனித ஒழுக்கம் அவசியம்...
ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற்சி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங் களாகும். கற்பு நெறியிலிருந்து ஆண்களும்,பெண்களும் தவறுவது தான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்பு நெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து விட்டால் அச்சமுதாயத்திற்கு முடிவுக்காலம் நெருங்கி விட்டதென்று பொருள். இதை யாராலும் தடுக்க முடியாது. அதனால், தனிமனித ஒழுக்கத்தின் அடிப்படையில் தான் சமுதாயத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு செயலின் பயனில் கருத்தைச் செலுத்தும் அளவிற்கு, அந்த செயலைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். செல்ல வேண்டிய பாதையில் கவனம் வைத்தால் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவதற்கான வெற்றிரகசியங்கள் ஒவ்வொன்றாக திறக்க ஆரம்பிக்கும். என்வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்களுள் மிகப்பெரியதாக இதைக் கருதுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)


1 comment:
//தாயிர்சிறந்த//
தாயிற்சிறந்த என்று இருந்தால் தயிர் வாடையைத் தவிர்த்திருக்கலாம்.
Post a Comment