Thursday, March 11, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 9

முதலில் காபினெட் உடன் SMPS யை அசெம்பிள் செய்ய வேண்டும். பின்னர் மதர் போர்டு ஐ காபினெட் உடன் இன்னைக்க வேண்டும். மதர் போர்டு காபினெட்டில் அசெம்பிள் செய்த வுடன் அதன் circuit எதுவும் காபினெட்டில் படாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சரி செய்யா விடில் ஷார்ட் circuit ஏற்பட்டு போர்டனது பழுதாகிவிடும். ஆகவே போர்டு அசெம்பிள் செய்யும் போது மட்டும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அடுத்ததாக போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும். பொதுவாக ப்ரோசெச்சொரைன் ஒரு பக்கம் மட்டும் அம்புக்குறியிட்டு கட்டப் பட்டிருக்கும்.
அதை கவனத்தில் கொண்டு போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பின்னர் அதன் மேல் கூலர் ஃபேன் பொறுத்த வேண்டும் . கூலர் ஃபேன் பொருத்தும் போதே அதற்கான பவர் கேபிள் இம் பொருத்தி விட வேண்டும். ப்ரோசெசரின் வெகு அருகிலேயே அதற்கான பவர் source இருக்கும்.

பின்னர் நினைவகத்தை பொறுத்த வேண்டும் . பொருத்தும் போதும் நினைவகத்தின் கடியும் மதர் போர்டில் உள்ள காடியும் பொருந்துமாறு இணைக்க வேண்டும்.

பின்னர் பிரான்ட் பநெல் கோன்னேக்டோர்கள் முழுவதையும் இணைக்க வேண்டும் . மதர் போர்டு உடன் வரும் manual புக்கில் இதை பற்றி விரிவாக இருக்கும்.

இப்போது SMPS இல் உள்ள மதர் போர்டு க்கு பவர் கேபிள் ளை இணைக்க வேண்டும். பின்னர் பவர் ஆன் செய்து ஒரு பீப் ஒலி கேட்டவுடன் பவர் ஆப் செய்யவும். அவ்வாறு ஒலி கேட்டல் நம் இனைத்த அணைத்து இணைப்புகளும் மிக சரியாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாமல் தொடர் ஒலி எழுபினாலோ அல்லது ஒலி எழுப்ப பட விட்டாலோ நாம் இணைப்பை சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை உங்கள் மதர் போர்டில் ஆன் போர்டு ஸ்பீக்கர் இல்லையெனில் நீங்கள் சரியாக இணைதிருந்தாலும் ஒலி வராது. உங்களுக்கு, CPU வில் மானிடர் இணைத்த பின் நீங்கள் சரி பார்க்கலாம்.


பின் ஹார்டிஸ்க் இணைக்க வேண்டும் . இதனை இணைக்கும் போது இரண்டு பக்கம் screw செய்வது அவசியம் . பின்னர் டேட்டா கேபிள் மற்றும் பவர் கேபிள் இரண்டையும் இணைக்க வேண்டும் . ஹார்டிஸ்க் இணைக்கும் முன் அதை சீரியல் நம்பர் நோட் செய்து கொண்டால் பின்னர் வாரேன்டி செக் செய்யும் போது ஹார்டிஸ்கை கழட்டி மாட்ட தேவையில்லை.

அதன் பின் DVDடிரைவ் இணைக்க வேண்டும்.


பின்னர் SMPS இல் இருந்து வரும் பவர் source ஐ ஹார்டிஸ்க் மற்றும் dvd டிரைவ் களுக்கு கொடுக்க வேண்டும்.

மதர் போர்டு பற்றிய எளிதான தகவல் கல் கிலே
A-SATA
B-???
C-GPU
D-Heat Sink
E-LED
F-???
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6-IDE Port
அனைத்தும் அசெம்பிள் செய்தவுடன் VGA போர்டில் மானிடர் ஐ இணைக்க வேண்டும். அதன்பின் USB போர்டில் keyboard மற்றும் மௌஸ் ஐ இணைக்க வேண்டும். இப்பொழுது கணிணி அசெம்ப்ளே செயப் பட்டுவிட்டாலும். நம்மால் கணினியை இயக்க முடியாது. ஏனனில் ஆபெரடிங் சிஸ்டம் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே நம்மால் இயக்க முடியும்.

ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி ?

அதற்கு முன் ஹார்ட்டிஸ்கை பார்மட் செய்ய வேண்டும். அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது அதை பற்றி தான்.

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 8.

ஒரு கணிணியின் செயல்பாட்டினை உணர்த்துவதும் நாம் கொடுக்கும் இன்புட்களை அவுட்புட் களாக பார்க்க உதவுவது மானிடர் ஆகும் . பொதுவாக மானிடர் தான் கணிணியின் முதல் ஈர்ப்பாக அமைகிறது.

மானிடர்களை CRT LCD என இரு வகையாக பிரிக்கலாம். இதில் CRT வகை மானிடர்கள் அனலாக் தொழி நுட்பத்தில் தயாரானவை. இவை எளிதாக கையாள முடியாத, கனமான, அதிக மின்சாரத்தை எடுத்து கொள்பவை. தொடர்ந்து பார்க்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சம் கண்ணுக்கு கெடுதலை தரும். விலை அளவில் பார்க்கும் போது இது மிகவும் சிக்கனமானது. பழுதாகும் பட்சத்தில் எளிதாக சரி செய்யலாம். உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும். தற்போது இதே CRT வகை மானிடர் இல் டிஜிட்டல் தொழில் நுட்பமும்  சேர்ந்து வருகிறது. அதனால் காட்சிகள்  முன்னை விட சிறப்பானதாக தெரியும்.

இருந்தாலும் இடத்தினை அதிக அளவு ஆகிரமித்து கொள்வதாலும் LCD மானிடர் களின் விலை குறைய துவங்கி உள்ளதாலும் சந்தைகளில் விற்பனை குறைய துவங்கி உள்ளது.

LCD மானிடர் கள் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன. இதற்கு பெரும் காரணமாய் இருப்பது இது கையாளவதற்கு மிகவும் எளிதானது. அத்துடன் மிக குறைந்த அளவே மின்சாரத்தை எடுத்து கொள்கிறது. இதில் காணும் காட்சிகள்   நல்ல துல்லியத்துடன் கிடைகின்றன அதிக நேரம் கணிணியில் வேலை செய்வோர் பெரும்பாலும் விரும்புவது இவ்வகை மானிடர்களே. தற்போது சந்தைகளில் அதிகம் விற்கப்படுவது 20" ,22" வகை மானிடர்கள் தான். ஏனனில் படங்கள் பார்பதற்கும் வேலை செய்வதற்கும் இத்தகைய மாடல்கள் பெரும்பான்மையாக விரும்பப்படுகின்றன.

நாம் LCD வகை கணிணியில் இருந்தாலும் தொழில் நுட்பம் எங்கோ சென்று கொண்டிருகிறது. LCD அடுத்து பிளாஸ்மா வகை மானிடர்கள் வர துவங்கி விட்டன. இவை LCD யை விட எடை குறைவானது அத்துடன் அதனை விட காட்சிகள் சிறப்பாக கட்ட கூடியாது . அனால் மின்சாரத்தை LCD யை விட அதிகமா எடுத்து கொள்ளும். இதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அளவும்  LCD யை விட அதிகமா இருக்கும். மிகவும் அருகில் சென்று பார்த்தல் காட்சிகளில் சிறிது தெளிவில்லாமல் தெரியும். இதன் விலை LCD வகையை விட சிறிது அதிகமே.


பாதி வீடுகளில் பிளாஸ்கே இல்லாத போது எங்கே பிளாஸ்மா பற்றி எண்ணுவது.
நாம் வங்கப் போகும் மானிடர் 20" சாம்சுங் - 7,400 RS
அடுத்த வகுப்பில் இருந்து ஒவ்வன்றாக சேர்த்து அசெம்பிள் செய்ய போகிறோம்.

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 7

பொதுவா கணிணி வாங்கிய உடனே நாம் பார்ப்பது படமாக தான் இருக்கும் . அப்படி படங்களை பார்பதற்கும் நமது டேட்டா பேக்கப் எடுபதற்கும் ,கணிணியில் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய, பாடல்களை கேட்க என எல்லாவற்றுக்கும் DVD டிரைவ் தேவையானது.

பொதுவாக இது மூன்று வகைகளில் வருகிறது.
1. ரீடர் ஒன்லி
2.கம்போ டிரைவ் (DVD read cd write )
3.ரைட்டர்
விலையில் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்றாலும் ரீடர் ஒன்லி அலுவலகங்களுக்கு (பாதுகாப்பு காரணங்களுக்காக ) அதிகம் பயன்படுகிறது . மற்றபடி எல்லோரும் வாங்குவது ரைட்டரைதான் . ரைட்டரில் அதிகம் விரும்பி வங்கப் படுவது சோனி, சாம்சுங் மற்றும் ஹட்ச்பி.

பொதுவான ரைட்டரில் ஏற்படும் பிரச்சினை என்று பார்த்தால் இரண்டு மட்டுமே . ஒன்று DVD read ஆகாது . இதற்கு உங்கள் DVD ரைட்டரின் லென்ஸ் சுத்தமாக துடைத்து வந்தால் பிரச்சினை வராது . இதற்காக தனியே கிளீனிங் DVD உள்ளது .

இரண்டு , DVD டிரைவில் ஏற்படும் ஓபன் மற்றும் க்ளோஸ் பிரச்சினை . இதை நாமே எளிதாக சரி செய்து விடலாம் .இதற்கு காரணமான ரப்பரை மாற்றினாலே போதும் , இதன் விலையும் 10 ரூபாக்குள் முடிந்து விடும் .

தற்போது ஒரு DVD யில் 4.5 GB ரைட் செய்ய முடியும் ,அதுவே டுயல் லேயர் DVD எனில் 8.5 GB ரைட் செய்ய முடியும் .தற்போது இவ்வகை DVD களை நாம் சினிமா படங்கள் வாங்கும் போது பார்க்கலாம் .

இனி வரும் காலங்களில் ப்ளூ ரே டிஸ்க் களும் எளிதாக புழக்கத்தில் வர ஆரம்பிக்கும் . ஒரு பளு ரே டிஸ்க் கில் ஒரு லேயர் எனில் 25 GB ம் இரண்டு லேயர் எனில் 50 GB ம் ரைட் செய்து கொள்ளலாம்.


இன்னும் நாம் 8.5 GB டிஸ்க் கில் நின்று கொண்டிருக்க , அடுத்த கட்ட டெக்னாலஜி ஆக Holographic Versatile டிஸ்க் கள் வர துவங்கி விட்டன . சுமாராக இதில் 1 TB(1024 GB) அளவு டேட்டா ஸ்டோர் செய்து கொள்ளலாம் . நாமல்லாம் எப்ப ப்ளூ ரே டிஸ்க் வந்து அப்புறம் HV டிஸ்க் வரத்துக்குள்ள அடுத்த பத்து டெக்னாலஜி வந்து போயிருக்கும் .

நாம் வாங்கி அஸம்பிள் செய்ய போகும் DVD ரிட்டர் சோனி - 1100 ரஸ்.

கீபோர்ட் இல் PS/2 மற்றும் USB என இரு வகைகள் வந்தாலும் .அதிகம் உபயோகப்படுவது USB வகை கீ போர்ட்களே . wireless வகை கீபோர்ட் களை தவிர்ப்பது நலம் ஒரு சில பிளஸ் பாயிண்ட் கள் இருந்தாலும் அதற்கு பாட்டரி சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பாட்டரி அடிகடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும் . அதே போல் மௌஸ் வாங்கும் போது ஒப்டிகால் USB வகை மௌஸ் களே மிகவும் சிறந்தது . பல் மௌஸ் வகைகளில் எளிதில் பால்களின் அடியிலும் மௌஸ் இன் உள்ளேயும் அழுக்கு படிந்து பழுதடைந்து விடும் .

கீபோர்ட் மற்றும் மௌஸ் இல் மைக்ரோசாப்ட் மற்றும் logitech இரண்டும் சிறந்து விளங்குகின்றன . இரண்டின் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை . எனவே நமக்கு பிடித்த மாடல்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம் . கீபோர்ட் வாங்கும் போதே மல்டிமீடியா கீபோர்ட் வாங்கி கொண்டால் படங்கள் பார்க்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கும். வாரம் ஒருமுறை மெலிதான துணி முலம் இவற்றை துடைப்பதன் முலம் தூசி படியாமல் பாதுகாக்க வேண்டும் .

நாம் வாங்க போகும் கீபோர்ட் மற்றும் மௌஸ் இன் விலை - 700 RS .

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது மானிடர்.

Monday, March 8, 2010

பெண்கள் தினம் எப்போது வந்தது?

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

* முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்.,28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட் டது.

* பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப் பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

* இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

* அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

* அதன் பின்னரும் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946ல் தான் பெண்கள் ஓரளவு உரிமை பெற துவங்கியுள்ளனர் என்று அங்கீகரித்து, அது முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் இச்சமயத்தில், பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பெண்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த நாடுகளில் கூட, இப்போது போர் முனைக்கு போகும் அளவுக்கு பெண்கள் உயர்ந்து வருகின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது தானே!கரண்டி பிடித்த கைகள் இன்று கம்ப்யூட்டரில் விளையாடுகிறது. நவீன உலகில் எந்த துறையானாலும், ஆண்களுக்கு சமமாக அதில் புகுந்து சாதிக்க ஆரம்பித்து விட்டனர். இனி, அவர்களது வளர்ச்சியை எந்த முட்டுக் கடைப் போட்டும் தடுக்க முடியாது. ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்து வந்த பல துறைகளில் முதன் முதலாய் தங்கள் காலடி வைத்து ஆண்கள் உலகை ஆட்டம் காண வைத்து வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினம் : இன்று சர்வதேச பெண்கள் தினம். பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளா தாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளை பாராட்டும் வகையிலும் இன்றைய தினத்தை கொண்டாட வேண்டும். சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் மற்றும் சில நாடுகளில் இந்நாள் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போன்று அறிவிக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத் திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். உலகில் இன்று பெண்கள் பிரதமராகவும், விண்வெளி வீராங்கனையாகவும், டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், ராணுவ வீரர்களா கவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும், விளம்பர மாடலிங்காகவும் , தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்களின் சாதனைகள் : இந்திய வரலாற்றில் பெண்கள் பிரதம ராகவும், ஆட்சியாளர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். இன்று ஜனாதிபதியாகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலை வராகவும் பெண்கள் இருக்கின்றனர். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சம அந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வி யறிவு உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரம் சற்று பின்தங்கியே உள்ளது. பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

சாதனை படைக்க பெண்கள் : ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.

"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!'

                                                                          - பாரதியார்

Sunday, March 7, 2010

நித்தியானந்தாவின் சிறப்பு பேட்டி... (ஆங்கிலம் மற்றும் தமிழில்).



தமிழுக்கு கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்...

Saturday, March 6, 2010

கர்ணா படப்பாடல் - ரஞ்ஜிதா-அர்ஜுன்.

நித்யானந்தாவின் நிஜ முகம்...