Thursday, March 11, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 9

முதலில் காபினெட் உடன் SMPS யை அசெம்பிள் செய்ய வேண்டும். பின்னர் மதர் போர்டு ஐ காபினெட் உடன் இன்னைக்க வேண்டும். மதர் போர்டு காபினெட்டில் அசெம்பிள் செய்த வுடன் அதன் circuit எதுவும் காபினெட்டில் படாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சரி செய்யா விடில் ஷார்ட் circuit ஏற்பட்டு போர்டனது பழுதாகிவிடும். ஆகவே போர்டு அசெம்பிள் செய்யும் போது மட்டும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அடுத்ததாக போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும். பொதுவாக ப்ரோசெச்சொரைன் ஒரு பக்கம் மட்டும் அம்புக்குறியிட்டு கட்டப் பட்டிருக்கும்.
அதை கவனத்தில் கொண்டு போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பின்னர் அதன் மேல் கூலர் ஃபேன் பொறுத்த வேண்டும் . கூலர் ஃபேன் பொருத்தும் போதே அதற்கான பவர் கேபிள் இம் பொருத்தி விட வேண்டும். ப்ரோசெசரின் வெகு அருகிலேயே அதற்கான பவர் source இருக்கும்.

பின்னர் நினைவகத்தை பொறுத்த வேண்டும் . பொருத்தும் போதும் நினைவகத்தின் கடியும் மதர் போர்டில் உள்ள காடியும் பொருந்துமாறு இணைக்க வேண்டும்.

பின்னர் பிரான்ட் பநெல் கோன்னேக்டோர்கள் முழுவதையும் இணைக்க வேண்டும் . மதர் போர்டு உடன் வரும் manual புக்கில் இதை பற்றி விரிவாக இருக்கும்.

இப்போது SMPS இல் உள்ள மதர் போர்டு க்கு பவர் கேபிள் ளை இணைக்க வேண்டும். பின்னர் பவர் ஆன் செய்து ஒரு பீப் ஒலி கேட்டவுடன் பவர் ஆப் செய்யவும். அவ்வாறு ஒலி கேட்டல் நம் இனைத்த அணைத்து இணைப்புகளும் மிக சரியாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாமல் தொடர் ஒலி எழுபினாலோ அல்லது ஒலி எழுப்ப பட விட்டாலோ நாம் இணைப்பை சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை உங்கள் மதர் போர்டில் ஆன் போர்டு ஸ்பீக்கர் இல்லையெனில் நீங்கள் சரியாக இணைதிருந்தாலும் ஒலி வராது. உங்களுக்கு, CPU வில் மானிடர் இணைத்த பின் நீங்கள் சரி பார்க்கலாம்.


பின் ஹார்டிஸ்க் இணைக்க வேண்டும் . இதனை இணைக்கும் போது இரண்டு பக்கம் screw செய்வது அவசியம் . பின்னர் டேட்டா கேபிள் மற்றும் பவர் கேபிள் இரண்டையும் இணைக்க வேண்டும் . ஹார்டிஸ்க் இணைக்கும் முன் அதை சீரியல் நம்பர் நோட் செய்து கொண்டால் பின்னர் வாரேன்டி செக் செய்யும் போது ஹார்டிஸ்கை கழட்டி மாட்ட தேவையில்லை.

அதன் பின் DVDடிரைவ் இணைக்க வேண்டும்.


பின்னர் SMPS இல் இருந்து வரும் பவர் source ஐ ஹார்டிஸ்க் மற்றும் dvd டிரைவ் களுக்கு கொடுக்க வேண்டும்.

மதர் போர்டு பற்றிய எளிதான தகவல் கல் கிலே
A-SATA
B-???
C-GPU
D-Heat Sink
E-LED
F-???
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6-IDE Port
அனைத்தும் அசெம்பிள் செய்தவுடன் VGA போர்டில் மானிடர் ஐ இணைக்க வேண்டும். அதன்பின் USB போர்டில் keyboard மற்றும் மௌஸ் ஐ இணைக்க வேண்டும். இப்பொழுது கணிணி அசெம்ப்ளே செயப் பட்டுவிட்டாலும். நம்மால் கணினியை இயக்க முடியாது. ஏனனில் ஆபெரடிங் சிஸ்டம் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே நம்மால் இயக்க முடியும்.

ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி ?

அதற்கு முன் ஹார்ட்டிஸ்கை பார்மட் செய்ய வேண்டும். அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது அதை பற்றி தான்.

1 comment:

Post a Comment