-
Friday, October 30, 2009
Wednesday, October 14, 2009
குருவுக்கும் நாம் அடிமையல்ல!
யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.
அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.
இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்

இதயம் துடிப்பது எதற்காக?
* தன்னடக்கம் பழகாதவர், துர்நடத் தையுள்ளவர்கள், மனதில் அமைதி இல்லா தவர்கள், தியானம் பழகாதவர்கள் ஆகிய இவர்கள் பெரும் படிப்பாளி களாக இருந்தாலும் கடவுளை அடையத் தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.
* உலகத்தை இருக்கின்றபடி ஏற்றுக் கொள்ளுங்கள். தீமையை எண்ணி வருத்தம் கொள்ளா தீர்கள். திருத்தம் செய்வதாக இருந்தால் முதலில் உங்கள் மனதை சீர்திருத்தம் செய்யுங்கள்.
* எத்துன்பம் வந்தாலும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள் நாம் என்ற எண்ணத்துடன் பெருமிதஉணர்வு கொள்ளுங்கள்.
* இதயம் துடிக்கும் சப்தம் எங்கோ வெளியில் கேட்ப தாக எண்ணாதீர்கள். நம் உள்ளத்தில் இறைச்சக்தி உறைந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தான் நம் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.
* ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறை முகமாக உண்டாகிறதோ, அந்த அளவுக்கு நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.
* சுதந்திர உணர்வைத் தன்னிடத்தில் உணர்பவன் நெஞ்சில் அன்பு ஊற்றெடுக்கும். அடிமைப்புத்தி கொண்ட மனிதன் யாரையும் நேசிக்க முடிவ தில்லை.

வாழ்வில் அர்த்தம் வேண்டும்...
* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று கூறு. நீ உறுதியுடன் இருந்தால் கொடிய விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
* நீ வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன் ஆவாய்.
* மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவாற்றல் வளரும். சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காத்து விடுதலை பெறச் செய்யும்.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன. உனது மனம், இதயம், ஆன்மா என்ற மூன்றினையும் அர்ப் பணித்து செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண் டவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல் களைச் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். வலிமை உடையவன் நீ என்று நினைத்தால் வலிமை உடையவனாகி விடுவாய்.
* ஒரு நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து முறையான வழியைக் கைக்கொண்டு வெற்றி வீரனாக விளங்கு. நீ வாழ்ந்து முடிந்த பின் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்

வெற்றிக்கு சிறந்த வழி...
* எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.
* சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.
* நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள்.
* ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.

முழு பொறுப்பையும் சுமப்போம்...
* சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள் ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள்.
* பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பல வீனத்திற்கான காரணத்தை சிந்திப்ப தல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.
* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடைய வராகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப் பழகுங்கள்.
* சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.
* ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

எதையும் நாம் சாதிக்கலாம்...
* நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும்.
* நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள்.
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.

Subscribe to:
Posts (Atom)