Wednesday, October 14, 2009

வெற்றிக்கு சிறந்த வழி...

* எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.

* சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.

* நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள்.

* ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.

No comments:

Post a Comment