Wednesday, October 14, 2009

இதயம் துடிப்பது எதற்காக?

* தன்னடக்கம் பழகாதவர், துர்நடத் தையுள்ளவர்கள், மனதில் அமைதி இல்லா தவர்கள், தியானம் பழகாதவர்கள் ஆகிய இவர்கள் பெரும் படிப்பாளி களாக இருந்தாலும் கடவுளை அடையத் தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.

* உலகத்தை இருக்கின்றபடி ஏற்றுக் கொள்ளுங்கள். தீமையை எண்ணி வருத்தம் கொள்ளா தீர்கள். திருத்தம் செய்வதாக இருந்தால் முதலில் உங்கள் மனதை சீர்திருத்தம் செய்யுங்கள்.

* எத்துன்பம் வந்தாலும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள் நாம் என்ற எண்ணத்துடன் பெருமிதஉணர்வு கொள்ளுங்கள்.

* இதயம் துடிக்கும் சப்தம் எங்கோ வெளியில் கேட்ப தாக எண்ணாதீர்கள். நம் உள்ளத்தில் இறைச்சக்தி உறைந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தான் நம் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.

* ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறை முகமாக உண்டாகிறதோ, அந்த அளவுக்கு நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.

* சுதந்திர உணர்வைத் தன்னிடத்தில் உணர்பவன் நெஞ்சில் அன்பு ஊற்றெடுக்கும். அடிமைப்புத்தி கொண்ட மனிதன் யாரையும் நேசிக்க முடிவ தில்லை.

No comments:

Post a Comment