Sunday, November 29, 2009

இந்திரா காந்தி காதல் திருமணம்...

காதலிப்பவர்கள் அனைவரும் தைரியமானவர்களா? அல்லது தைரியமானவர்கள் அனைவரும் காதலிக்கிறார்களா?

இலவசங்களின் மறுபக்கம்.

இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு









மிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச "டிவி', காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.

இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.

சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.

மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. "உழைத் தால் தான் உணவு' என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.

குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு "டிவி' தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு "டிவி'க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

                (நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.)

மெல்ல மறையும் பின்னல் அழகு!!!



ங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். "ஆத்தாடி மாரியம்மா!" என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!


பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, "இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!"

பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!

பின்னல் போய் வந்தது "போனி டெயில்". பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!

உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!



‌டிய‌ வாரிய‌ த‌லை
முத்தில்லா கொலுசு
ஒற்றைப் பின்னல்
கை நிறைய‌ வ‌ளைய‌ல்
க‌ட்டிக் கொள்ள‌ சேலை
சாயம் இல்லா உதடு
மை இல்லா கண்கள்
நகம் இல்லா விரல்கள்
க‌வ‌லை இல்லா சிரிப்பு

நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!

ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்…

                                              நன்றி: கவிநயா

Sunday, November 22, 2009

நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்...

சாய்பாபாவின் 84 வது பிறந்த நாளை ஒட்டி அவர் மக்களுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கேளுங்கள். : * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார். ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம் ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.

* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத் தாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.

* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள். நல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதி உடையவராவீர்கள்.

*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம். தீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து தெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.

* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம் கொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை காப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.

* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனியாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக் கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.

* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.

* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர் முகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே, நடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.

* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை. அவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக் கொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.

* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன் நோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்ளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.

* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமையைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.

*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால் வெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ நம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி உள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.

* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக் காக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நலமனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.

Saturday, November 21, 2009

மனிதம் பேசும் எதுவும் மகத்தானது...

மனிதம் பேசும் எதுவும் மகத்தானது. கீழேயுள்ள காட்சிப்பதிவும், கதைசொல்கின்றது. மனித மான்பு மடடுமன்றி, தனம்பிக்கையையும், எழுச்சியையும் எடுத்துரைக்கிறது.


இது ஒரு விளம்பரப்படம் என்பது இறுதியில்தான் தெரிகிறது. இது தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட Pantene சம்பபூவுக்கான தொலைக்காட்சி விளம்பரப்படம். 2008 இல் வெளிவந்தது.

இசையால் வசமாகாத இதயம் எது ???

இசையால் வசமாகாத இதயம் எது ?. யாரையும் வசீகரித்துவிடும் மகத்துவம் வாய்ந்தது இசை. இயற்கையில் தோற்ம் பெற்று, இயற்கையையே மருகிப் போகச் செய்யவும் இசையால் முடியும்.

இசை ஒரு சுகானுபவம் என்பதையும் தாண்டி, சுக மருத்துவம் என்ற மான்பினையும் பெற்று வருகிறது. அன்மைக்கால மருத்துவ ஆராச்சிகளில் இசையால் நோய்களைக் குணப்படுத்தும் வழிவகை பற்றிய ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. இசையின் நுட்பங்கள் தெரிந்த இரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து தரும் ஒரு இசைக்கோலத்தை இங்கே பார்ப்பபோம்.

மான்டலின் சிறிநிவாஸ், ட்ரஸ் கலைஞர் சிவமணி ஆகியோர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வழங்கியது.


She without arm, he without leg...