Saturday, December 19, 2009

வாலிபனுக்கும் தியானம் அவசியம்... -நித்யானந்தர்


நாம் எல்லோரும் ஆனந்தத்தின் எல்லைக்கு செல்லவே ஆசைப்படுகிறோம். நமக்கு பிடித்த வழியில் ஆனந்தத்தை அடைய நாள்தோறும் முயற்சிக்கிறோம். நமக்குப் பிடித்த விஷயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதல், புகழ், பணம், பதவி, உணவு, ஆடை, ஆபரணங்கள் இப்படி எதுவாக இருந்தாலும் இவற்றை அனுபவித்தால் இன்பம் கிடைக்கும் என்று அதை நோக்கியே ஓட ஆரம்பிக்கிறோம்.

நாம் தேடுகின்ற இன்பத்தை ஒருக்காலும் வெளியில் பெற முடியாது. புத்தர் முதல் ரமணமகரிஷி வரை எத்தனையோ மகான்கள் நமக்குப் பலவிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எல்லாம் உண்மையான இன்பத்தின் உச்சத்தை அனுபவித்தவர்கள். தாங்கள் பெற்ற அனுபவங்களையே, அறிவுரைகளாக நமக்கு வழங்கியுள்ளனர்.

தியானம், ஞானம் போன்ற விஷயங்கள் எல்லாம் ஞானமார்க்கத்தினர் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று தவறாக நினைக்கிறோம். வாழ்க்கையை அனுபவிக்காமல் நழுவ விட்ட வயோதிகனை விட அணு, அணுவாக அனுபவிக்கத் துடிக்கும் வாலிபனுக்கே தியானம் அவசியம்.


நம் கையை விட்டு போன இறந்த காலம், இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம் ஆகியவற்றை பற்றி கவலைப்படுவதால் தான், நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது.

No comments:

Post a Comment