கோபம் உண்டாகும் போது அதை அடக்க முயற்சிப்பது வேண்டாத வேலையாகும். கோபம் ஏதாவது ஒரு காரணம் பற்றியே வருகிறது. அக்காரணத்தை ஆராய முற்படுவது நல்லது. தவறு நம் மீது இருக்கும்போது, நாம் அடுத்தவர் மீது கோபப்படலாமா என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள். கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைவதை உணர்வீர்கள்.நீங்கள் கள்ளம் கபடம் இல்லாதவர். தவறே செய்யாதவர் என்றாலும் கூட, யார் மீதாவது கோபப்படலாமா என்றால் அப்போதும் கோபம் கூடாது தான். ஏனென்றால், மனம் தூய்மையான நிலையில் கோபமே உண்டாகாது. அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக் காட்டும் போது நம் சக்தி அநியாயமாக வீணாகிறது. இதனால், மனமகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். கோபப்படும் சமயத்தில் மனச்சிதறல் ஏற்படுவதால், நம் செயல்களில் முழுமையாக ஈடுபட முடியாது.மனிதன் மனதிற்கு எஜமானனாக இருக்க வேண்டும். நம் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்ள உதவும் ஒரு வேலையாளாக மனதை வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலநேரங் களில் மனிதன் மனம்போன போக்கில் சென்று பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்.
-நித்யானந்தர்.
No comments:
Post a Comment