ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது. ஆனால், அவரவரின் குறைகள் மங்கலாகக் கூடத்தெரிவதில்லை. மேலோட்டமாகப்பார்த்தாலே அடுத்தவர்களுடைய குறைகளைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால், நம் குறைகளைப் பார்க்க தெளிந்த பார்வை இருந்தால் மட்டுமே முடியும். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றால், இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று பொருள். புத்தியின் பயனே மகிழ்ச்சியாய் வாழ்வதற்குத் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தன் தகுதி என்ன என்பதை தெரியாமலேயே நான் ஒரு புத்திசாலி என்று நினைக்கும் நினைவு என்னும் எண்ணத்தில் தான் பெரும்பாலான முட்டாள்தனங்கள் வளர ஆரம்பிக்கின்றன. வாழ்க்கையில் சோம்பேறித்தனம் உடையவர்கள் நிறைய இழக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து செயல்புரிய விடாமல் சோம்பேறித்தனம் நம்மை பின்னுக்கு இழுத்துவிடும் ஆற்றல் கொண்டது. வாழ்வின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் முக்கியமானதே. அதை முழுமையாக அனுபவிக்கவும், இயல்பாக வாழவும் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்துவிடும். அப்போது தான் நீங்கள் உண்மையிலேயே வாழத் தொடங்குவீர்கள்.
-நித்யானந்தர்
-

No comments:
Post a Comment