Saturday, December 19, 2009

இப்படியும் ஒரு அறுவை சிகிச்சை!

* நீங்கள் பிறரிடம் பழகும் விதத்தை வைத்துத்தான், உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தன் உடல், மனம், உயிர் இம்மூன்றையும் முழுமையாக மதித்தால்தான் பிறரை முழுமையாக மதிக்க முடியும். இவற்றை அரைகுறையாக மதிப்பவர் பிறரையும் அரைகுறையாகத்தான் மதிப்பார்.


* "நான்' "எனது' என்ற குறுகிய வட்டத்தில் வாழும் வரை மகிழ்ச்சி என்பது கற்பனையில் கூட வராது. மற்றவர்களிடம் இனிமையாக பழக கற்றுக் கொண்டால் நல்ல உறவுகள் சுலபமாகக் கிடைத்துவிடும்.

* தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பதற்கு மனிதனாக பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால்,

சுமூகமான உறவுகளை வளர்த்துக் கொள்வது நல்ல வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும்.

* உங்களிடம் குறை இருந்தால் அது உடலில் இருக்கும் கட்டி போன்றதாகும். ஆகையால், அவற்றைத் திருத்திக்கொள்ளுங்கள். குறைகளைத் திருத்துவது என்பது மனதில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்வதற்குச் சமமாகும்.

                                                                                         —பரமஹம்ச நித்யானந்தர்

No comments:

Post a Comment