Friday, December 4, 2009

எப்படி சமைப்பது?

எந்த உணவையும் தவறான முறையில் சமைத்தால் கெடுதிதான்.


1. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

2. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

'3. அவரை, பீன்ஸ் போன்றவற்றை அதிக தண்ணீர் சேர்க்காமல் தண்ணீர் தெளித்து வேகவைக்க வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்க்காமல் தாளித்து சாப்பிடலாம்.

4. பால், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் 'ஏ' (A) சத்து அதிகமுள்ளது. இவற்றை அதிக சூட்டிலோ, அதிக நேரமோ சமைத்தால் சத்துக்கள் அனைத்தையும் இழந்துவிடும்.

5. கீரை வகைகளை நன்கு கழுவியபின் நறுக்க வேண்டும். நறுக்கியபின் கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் தண்ணீருடன் போய்விடும். கீரையை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்க வேண்டும்.

6. மட்டன், சிக்கன் இவற்றை பொரிப்பதைவிட நன்கு வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. சிக்கனை தயிரில் ஊறவைத்து சமைத்தால் அதிலுள்ள நச்சு நீங்கிவிடும்.

7. பாயசம், சர்க்கரைப்பொங்கல் இவற்றில் தேன் சேர்ப்பது தவறு. தேனை ஒருபோதும் சூடுபடுத்தக்கூடாது. பிசின் போல குடலில் ஒட்டிக்கொள்ளும். விஷம் கொண்டதாகிவிடும்.           
                                                              - ஆர்.கே.தெரஸா.

No comments:

Post a Comment