இது கலி யுகம் மட்டும் அல்ல கணிணி யுகம் கூட தான் . முன்பு தொலை காட்சி இல்லாத வீடு வீடு இல்லை தற்போது கணிணி இல்லாத வீடு வீடு இல்லை என்றாகி விட்டது . அப்படி இரண்டற கலந்து விட்ட கணினியை கடை தெருவில் விற்கும் கத்திரிக்காய் மாதிரி கூவி வித்தவுடன் ஓடி போய் வாங்கி விட கூடாது .
ஒவ்வருவருக்கும் ஒரு தேவை இருக்கும் நாம் செய்ய போகும் வேலைகளுக்கு ஏற்ப உள்ள கணினியை தேர்ந்தெடுக்க வேண்டும் . மாணவர்களுக்கு , அலுவலகத்திற்கு , விளையாட்டு பிரியர்களுக்கு , இணையப் பயன் பாட்டுக்கு , கணிணி வல்லுனர்களுக்கு , இசை பிரியர்களுக்கு , பொது தேவைக்கு என பலவாறாக இருந்தாலும் நாம் அசெம்பிள் செய்ய போவது ஒரு பொது பயன் பாடுள்ள கணிணியை தான் .
முதல் வகுப்பு என்பதால் எளிதாக தொடங்க நினைக்கிறேன் , எனவே நாம் கேபினெட் என்பதில் இருந்து தொடங்குவோம் . இந்த கேபினெட் தான் சென்டரல் ப்ரோசெசசிங் யுனிட் என்பதை தன்னகத்தே கொண்டுள்ளது .
இதில் சென்ட்ரல் ப்ரோசெசசிங் என்பது கேபினெட் ,இன்புட் என்பது கீபோர்ட் ,மௌஸ் , ஔட்புட் என்பது மானிடர் ஆகியவற்றை குறிக்கும் . மெமரி என்பது கணினியின் நினைவகத் திறன் . இந்த கேபினெட் உள்ளே தான் SMPS, மதர் போர்டு , ஹார்டிஸ்க் , மெமரி , ரைட்டர் , ப்லோப்பி டிரைவ்,cooler fan என அனைத்தும் இணைக்கப் பட்டு இருக்கும் . சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழே
கேபினெட் விலை Rs-900 - Rs-2500 (சென்னை விலை)
நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை Rs-1000.
அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கேபினெட் உடன் வரும் SMPS பற்றி.
நன்றி - மகா.



1 comment:
நல்ல தொடர்..தொடர்க...
Post a Comment