Friday, February 12, 2010

இருவர் பட கவிதை,,,

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...
தொன்ணுறு நிமிட‌ங்க‌ள் தொட்ட‌னைத்த‌ கால‌த்தால்
என்ணூறு ஆண்டுக‌ளாய் இத‌ய‌த்தில் க‌ண‌க்குத‌டி...
பார்வையிலெ சில‌ நிமிட‌ம்...
ப‌ய‌த்தொடு சில‌ நிமிட‌ம்...
க‌ட்டி அனைத்த‌ப‌டி க‌ண்ணீரில் சில‌ நிமிட‌ம்...
இல‌க்க‌ண‌‌மே பாராம‌ல் எல்லா இடங்க‌ளிலும்
முத்தங்க‌ள் விதைத்த‌ முக‌த்தில் சில‌ நிமிட‌ம்...

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...
எது நியாய‌ம் எது பாவ‌ம்
இருவ‌ருக்கும் தோன்ற‌வில்லை...
அது இர‌வா? அது ப‌க‌லா?
அதுப‌ற்றி அறிய‌வில்லை...
யார் தொடங்க? யார் முடிக்க‌?
ஒரு வ‌ழியும் தோன்றவில்லை...
இருவ‌ருமே தொடங்கிவிட்டோம்
இதுவ‌ரைக்கும் கேள்வி இல்லை...
அச்ச‌ம் க‌லைந்தேன்
ஆசையினை நீ அனிந்தாய்...
ஆடை க‌லைந்தேன்
வெட்க‌த்தை நீ அனிந்தாய்...
............. ....... .........
க‌ண்ட‌ திருக்கோல‌ம் க‌ண‌வாக‌ ம‌றைந்தாலும்
க‌டைசியிலே அழுத‌ க‌ண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுத‌டி.

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...

உண்னோடு நானிருந்த‌ ஒவ்வொரு ம‌ணித்துளியும்
ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையிலும் ம‌ற‌க்காது க‌ண்ம‌னியே...

                                            ******

No comments:

Post a Comment