Sunday, March 21, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 10


கணிணியை பார்மட் அடிப்பது என்பது மிக எளிதான வேலை தான் . ஆனால் கணிணியை தேவையான அளவு partition பிரித்து நமது தேவைகேற்ப பிரித்து பின்னர் அதை FAT32 ஆகவோ NTFS ஆகவோ மாற்றுவது தான் வேலையே .

முதலில் partition பிரிப்பது எதற்கென்றால் ஒரே ஹார்ட்டிஸ்கில் நம் டேட்டா வை வைத்தால் பராமரிப்பது எளிதாக இருக்காது . மேலும் ஹார்ட்டிஸ்கின் செயல்பாடும் குறைந்து விடும்.

ஹர்ட் டிஸ்க் பார்மட் செய்ய பல வழிகள் இருந்தாலும் கிழ்கண்ட சிலவை அதிகம் பயன்படுகின்றன.

விண்டோஸ் bootable cd (FDISK)
தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் (partition magic )
விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்யும் போதே பிரிப்பது.



primary partion OS இன்ஸ்டால் செய்வதற்கு பயன்படும். Extended மற்றும் logical partition கள் டேட்டா கையாள்வதற்கு பயன்படும். ஆக OS இன்ஸ்டால் செய்வதற்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும் . இல்லைஎனில் ஒவ்வொரு விண்டோஸ் OS வேர்சின் னுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் சைட் இல் குறிபிட்டு உள்ளனர் . எடுத்துகாட்டாக விண்டோஸ் xp SP2 க்கு எவ்வளவு தேவை என பார்க்க,

பொதுவாக பார்மட் செய்யும் போது quick பார்மட் option ஐ தவிர்ப்பது நல்லது. புல் பார்மட் option எனில் ஹார்டிஸ்க் bad clusterkal குறைவதற்கான வைப்பு உள்ளது.
விண்டோஸ் இல் டிஸ்க் managament option மூலம் நாம் ஹர்ட் டிஸ்க் partition ஐ மாற்றி அமைக்கலாம். ஆனால் primary partition ஐ மாற்றவோ பிரிக்கவோ இயலாது. மிக தேவையான தரணங்களில் மட்டுமே ஹார்ட் டிஸ்க் பார்மட் அடிக்கப்பட வேண்டும். அடிக்கடி பார்மட் செய்தால் கண்டிப்பாக தன் செயல் திறனை ஹார்ட் டிஸ்க் இழந்து விடும்.
ஹார்ட் டிஸ்க் ஐ maintenance செய்வதற்கு விண்டோஸ் இல் option உள்ளது . தேப்ரக்மேண்டதியன் மற்றும் Error செக்கிங் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம். அல்லது தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் கள் முலமும் சரி செய்து கொள்ளலாம்.
 
அடுத்த வகுப்பில் நாம் விண்டோஸ் xp OS இன்ஸ்டால் செய்வது மற்றும் விண்டோஸ் OS மூலம் பார்மட் செய்வது என இரண்டையும் காணலாம்.

No comments:

Post a Comment