Sunday, March 21, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 11

கணிணியில் OS இன்ஸ்டால் செய்ய தேவையானவை விண்டோஸ் XP cd, மதர்போர்ட் டிரைவர் cd மற்றும் தேவையான மென்பொருள் தொகுப்புகள்.



முதலில் விண்டோஸ் XP bootable cd மூலம் கணிணியை பூட் செய்ய வேண்டும் . பின்னர் setup files load ஆகும்.


F8 பட்டன் அழுத்துவதன் மூலம் நாம் மைக்ரோசாப்ட் விதிகளுக்கு கட்டுப்பட்டு OS இன்ஸ்டால் செய்ய உள்ளோம் என்பதை குறிக்கும்.

முதல் option விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கும் இரண்டாவது option விண்டோஸ் file பழுது பட்டு இருந்தால் பயன் படும்.

மேற்கண்ட படத்தில் ஒரு partition மட்டும் உள்ள ஹார்ட் டிஸ்க் பயன் படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அதிக அளவுள்ள ஹார்ட் டிஸ்க் கிடைப்பதால் நாம் தேவையான அளவு பிரித்து பார்மட் செய்த பின் OS இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டால் முடிந்து restart ஆகும் போது பூட் வித் cd option ஐ பயன் படுத்த கூடாது.


இப்பொழுது நிறுவியுள்ள OS க்கு அண்டி வைரஸ் மென்பொருள் ஒன்றை நம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இல்லையெனில் கீழே  உள்ள படத்தில் உள்ளதை போல் வந்து நமக்கு நினைவூட்டும்.


அண்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்வது பற்றி பின் வரும் வகுப்புகளில் பார்க்கலாம். இப்போது நாம் OS இன்ஸ்டால் செய்தவுடன் அதை எவ்வாறு activation செய்வது என்று பார்க்கலாம்.




பெரும்பாலும் முதல் option மூலம் தான் activation கள் அதிகமாக செய்யபடுகிறது. இதற்கு கணிணி இணைப்பு அவசியம் வேண்டும். அத்துடன் OS சீரியல் கீ தேவைப்படும். இந்த கீ ஆனது நாம் வாங்கிய விண்டோஸ் XP cd உடன் வரும்.

பரவலாக நாம் ஒர்ஜினல் OS வாங்குவது இல்லை அதற்கு காரணம் விலை ஒன்றுதான். சரி நீங்கள் நண்பர்கள் யாரிடம் இருந்தாவது வாங்கி இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள். உங்களிடம் இணைய இணைப்பும் இல்லை எவ்வாறு அதை activate செய்வது, எப்படி OS ஐ முழுமை படுத்துவது.

அதற்காக தான் activator கள் பயன்படுகின்றன . இந்த முறை பயன் பாட்டில் வைரஸ் பரவுவது அதிகமாகும் . ஏனனில் இவை யாவும் ஸ்கிரிப்ட் மூலம் இயக்கப் படுகிறது. அதிக பயன் பாட்டில் இவை இருந்தாலும் இவற்றை பயன் படுத்துவது குற்றமே. ஆகவே இதனை பற்றி அதிகம் சொல்ல போவதில்லை.

அடுத்த வகுப்பில் reinstall செய்வது பற்றி....

No comments:

Post a Comment