Wednesday, October 14, 2009

தவறுக்காகவும் மகிழலாம்...

* எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது தான் நமது லட்சியம். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டால் நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். பிறகு மற்றொன்றில் கடவுளைப் பார்க்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் தெய்வாம்சமாக பார்க்கத் தொடங்கினால் நம் ஆன்மிகக் கருத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.


* ஒன்றேயான இறைவன் நம் மனத்தை விட அதிவேகமாக இயங்கக் கூடியவர். அதிவிரைவாகச் செயல்படக்கூடியவர். தேவாதிதேவர்களுக்கும் எட்டமுடியாத அரிதானவர். சிந்தனைக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டு நிற்பவர். அப்படிப்பட்ட இறைவன் இயங்கினால் அன்றி உலகம் இயங்கமுடியாது.

* என்னைப் பொறுத்த வரையில் செய்த நல்ல செயல்களுக்காக மகிழ்கிறேன். செய்த தீய செயல்களுக்காகவும் மகிழ்கிறேன். செயல்களைச் சரியாக செய்தததற்காகவும் மகிழ்கிறேன். அதேவேளையில் செய்த தவறான செயல்களுக்காகவும் மகிழ்கிறேன்.

* மகிழ்ச்சி கொள்வது ஏனென்றால், என் தவறுகள் ஒவ்வொன்றும் ஓர் உயர்ந்த பாடத்தை கற்பித்திருக்கிறது. இதற்கு முன் எண்ணிய எண்ணங்களின் மொத்தவடிவமாகத் தான் இன்று நானிருக்கிறேன். எண்ணிய ஒவ்வொரு எண்ணமும் அதற்கான பலன்களை என்னிடத்தில் உண்டுபண்ணியிருக்கின்றன.

-விவேகானந்தர்

No comments:

Post a Comment