* உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப் படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ் சென ஒதுக்குங்கள்.
* நீங்கள் போதுமான அளவுக்கு நெடுங் காலமாக அழுது விட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. எழுந்து நின்று உங்கள் சுயகால்களில் நின்று போராடத் தயாராகுங்கள்.
* பலமற்ற மூளையால் ஒன்றும் செய்ய முடியாது. பலமற்ற நிலையை மாற்றி மூளையைப் பலப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமை. பலம் வந்தால் வெற்றி தொடர்ந்து பின்னால் வரும்.
* தைரியமாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது துணிவு. இவ்வுலகில் வாழ்வு எத்தனை நாள்? நெஞ்சில் துணிவிருந்தால் மட்டுமே அரிய பெரிய செயல்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.
* நாம் எப்படி எல்லாம் இருக்க விரும்புகிறோமோ அப்படி யெல்லாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடையே இருக்கிறது. உன் வாழ்க்கை உன் கையில் என்பது இதைத்தான்.
* இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக நாம் வந்திருக்கிறோம்.
-

No comments:
Post a Comment