Wednesday, October 14, 2009

கடமையில் கண் வையுங்கள்...

* உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை யுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக வந்திருக்கிறோம்.

* மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக் காக உயிரை விடுவது மேலாகும்.

* கோழைகளாக இருப்பதில் பயன் எதுவுமில்லை. இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். முழுமையாக கடமையாற்றுவதில் கண் வையுங்கள்.

* மிருகஇயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்று மூன்று விதமான குணங்களால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான்.

* தெய்வீகஇயல்பை வளர்ப்பது நல்லொழுக்கம். மிருகஇயல்பை வளர்ப்பது தீயொழுக்கமாகும்.

* ஆன்மிக உணர்வில்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைக் கீழ்நிலைக்கு தள்ளி விடுகின்றன.

* நன்மை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருந்தால் வாழ்க்கை பயனற்றதாகிவிடும்.

* வாழ்க்கை என்னும் கத்தி யாருக்கும் பயனில்லாமல் துருப்பிடித்து அழிந்து போவதைவிட, பிறருக்கு உதவி செய்வதால் தேய்ந்து அழிவதே மேலானது.

No comments:

Post a Comment