Wednesday, October 14, 2009

முதலில் உங்களை நம்புங்கள்!!!

* நம்மைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும்.

* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடையமுடியாத உயர்ந்த இடத்திற்கு நல்லமனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும்.

* உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள்.

* மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.

* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.

* கர்மயோகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு அவர் யார், எப்படிப்பட்டவர் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல் கூட அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது தான்.

-விவேகானந்தர்

No comments:

Post a Comment