* தைரியமாயிருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக என் பிள் ளைக ளாகிய நீங்கள் துணிவா யிருத்தல் வேண்டும். எதற் காகவும் எள் ளளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.
* உங்களுக்குள் இருக்கும் தெய் வத் தன்மையை வெளியே புலப்படுத் துங்கள். தெய்வீகத் தன்மையைச் சுற்றி, ஒவ்வொரு செயலும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.
* எல்லா <உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், மனிதர்களே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதை வழிபட இயலாதவன் என்றால், வேறு கோயில் எதுவும் எப்போதும் பலன் தராது.
* மலைபோல உயர்ந்த தடைகளையும் தாண்டிச் செல் லும் மனவுறுதியோடு போராடுங்கள். நம்பிக்கையும், நேர்மையும், பக்தியும் உங்களிடம் இருக்கும் வரை வெற்றி உங்களைத் தேடிவரும்.
* இன்று நமது நாட்டின் மக்கள் மதிக்கப்படுவது நம் முடைய ஆன்மிக சிந்தனை, எண்ணங்கள் ஆகியவற்றுக்காகத்தான். ஆனால், அவற்றின் பெரு மையை நாம் உணரவில்லை. வெளிநாட்டு மக்கள் நமது ஆன்மிக வளத்திற்காகவே நம்மை நாடு கிறார்கள்.
-

No comments:
Post a Comment